விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அவசரகால தேவைகளுக்காக நாடு திரும்பியவர்கள் – டாக்டர் அமன் பூரி

விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அவசரகால தேவைகளுக்காக நாடு திரும்பியவர்கள்.

துபாயில் இருந்து 191 பயணிகளுடன், கேரள மாநிலம் கோழிக்கூடு விமான நிலையத்தை வந்தடைந்த போது, அந்த விமானம் பெரும் விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், துபாயின் இந்திய துணைத் தூதர் டாக்டர் அமன் பூரி அவர்கள் இதுகுறித்து கூறுகையில், விமானத்தில் ஐந்து ஊழியர்கள் இருந்தார்கள். நாங்கள் விமானி தீபக்கை இழந்து விட்டோம் என்பதில் மிகவும் வருத்தமடைகிறோம். துணை விமணியும் உயிரிழந்து விட்டதாக கேள்வி படுகிறோம். மேலும் வரும் தகவல்களை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், விமானத்தில் பயணம் செய்த அனைவருமே அவசர தேவைகளுக்காக தான் பயணம் செய்தனர். சிலருக்கு விசா கேன்சலாகிவிட்டது. சிலர் காலாவதியான வழக்குகளை சந்தித்தவர்கள். சிலர் வேலையிழந்தவர்கள். வேறு சிலர் சிகிச்சைக்காக பயணம் செய்தவர்கள்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.