அஜித் படத்தின் கதாபாத்திரத்தை காப்பி அடித்த நடிகர் !!

நடிகர் அஜித்திற்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இவரின் படம்  திரைக்கு வரும் நாட்களை ரசிகர்கள் திருவிழா வாக  கொண்டாடுகின்றனர்.

ஆழ்வார் படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார். மேலும் இந்த படம் கடந்த 2007 ஆண்டு திரைக்கு வந்தது. இந்த படத்தை இயக்குநர்  ஷெல்லா இயக்கியிருந்தார். இப்படத்தில் அஜித் மருத்துவமனையில் வார்ட் பாய்யாக பணிபுரியும்  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இளம் நடிகர் அதர்வா ‘ குருதி ஆட்டம்’  படத்தில் வார்ட் பாய் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். ‘அதர்வா குருதி ஆட்டம்’ படத்தில் அஜித் ரசிகராக நடித்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். எனவே தான்  ஆழ்வார் படத்தில் உள்ள கதாபாத்திரத்தை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment