செண்டை மேளம் வைத்து விஸ்வாசம் படத்தை கொண்டாடிய ரசிகைகள்!!

12

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவான படம் விஸ்வாசம்.இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.கடந்த மாதம் பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகி வசூலில் பல சாதனைகள் செய்து வருகிறது.படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறந்த வரவேற்பு பெற்று வருகிறது.இந்நிலையில் தான் விஸ்வாசம் படம் வெளியாகி 30 நாள்கள் ஆகி உள்ளது இதை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சியில் உள்ள ஒரு திரையரங்கில் பெண்கள் மட்டும் பார்க்க சிறப்பு ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது.அந்த ஷோ பார்க்க வந்த பெண் ரசிகைகள் கேரளா செண்டை மேளம் வைத்து நடனம் ஆடி விஸ்வாசத்தை அமர்களப்படுத்தினர்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.