மீண்டும்… இந்தியாவில் 34 ஆயிரத்தை எட்டிய தினசரி கொரோனா பாதிப்பு;

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 320 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,33,81,728  ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பைவிட 4 ஆயிரம் அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,33,81,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 320 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,44,248 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 37,950 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,25,98,424 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,39,056 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 77,24,25,744 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 63,97,972 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.