தயவு செஞ்சு தவறவிடாதீங்க! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பற்றி கார்த்திக் சுப்புராஜ்!

Manjummel Boys மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’  திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் தமிழகத்திலும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில்  படத்தில் காலித் ரஹ்மான், காலித் ரஹ்மான், கணபதி எஸ் பொதுவால், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

READ MORE – கமல் தவறவிட்ட வெற்றி… அதே இடத்தில் தட்டிய தூக்கிய மல்லு சேட்டன்ஸ்.!

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான குணா படத்தினை மையமாக வைத்து இந்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு திகில் ஊட்டும் வகையில் அமைந்து இருக்கிறது என்றே கூறலாம். படத்தை பார்த்துவிட்டு அனைவரும் கண்மணி அன்போடு காதலன் பாடலை ஸ்டேட்டஸ்-ஆக வைத்து கொண்டு வருகிறார்கள்.

READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் அழைத்தும் சமூக வலைத்தளங்களின் மூலமும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசன் படக்குழு நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். அவரை தொடர்ந்து விக்ரம் படத்தின் இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.

read more- நான் ‘அம்மாவாக ஆசை படுகிறேன்’! பொன்னியின் செல்வன் நடிகை ஓபன் டாக்!

இந்த நிலையில், பேட்ட, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” ‘மஞ்சும்மல் பாய்ஸ்’  அருமையான படம்… அற்புதமான படம் ஃபிலிம்மேக்கிங் சூப்பரான ஒன்று.

இப்படியான ஒரு படத்தை எடுத்ததற்கு நான் தலைவணங்குகிறேன். இந்த அற்புதமான படத்தை கண்டிப்பாக தவறவிடாதீர்கள். இயக்குனர் சிதம்பரம் மற்றும் சௌபின்ஷாஹிருக்கு வாழ்த்துக்கள். மற்றும் படத்தில் நடித்த படக்குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” எனவும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மேலும். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment