ஆப்கன் காவல்துறை அதிகாரி இறுதி சடங்கில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு... தலிபான்களே காரணம் என குற்றச்சாட்டு...

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தற்போது வரை அரசு தரப்பிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும்

By kaliraj | Published: May 12, 2020 09:58 PM

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தற்போது வரை அரசு தரப்பிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே  உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் அந்நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து பயங்கர தாக்குதல்களை நடத்தி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு ராணுவத்தினர் மற்றும் அமெரிக்க படையினர்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் நஹாங்கர் மாகாணம் ஹுவா மாவட்டத்தின் மூத்த காவல்துறை  அதிகாரி ஹஜீ ஷேக் இகராம் கடந்த திங்கள்  இரவு மாரடைப்பால்  மரணமடைந்தார். இதையடுத்து, அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தில் திடீரென சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் அங்கு கூடியிருந்த 40 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் பயங்கரவாத அமைப்புகளே  காரணமாக இருக்கக்கும் என்று ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc