ஏரோ இந்தியா கண்காட்சி..! 10 கிமீ எல்லைக்குள் இறைச்சி விற்பனை தடை..!

பெங்களூரில் ஏரோ இந்தியா நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து 10 கிமீ தூரத்திற்கு இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களுருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை (Yelahanka Air Force) நிலையத்தில் ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெற உள்ளது. இதனால் கண்காட்சி நடைபெறு இடத்தை சுற்றி 10 கிமீ சுற்றளவில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரோ இந்தியா-2023 நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 17 வரை விமானப்படை நிலையத்தில் நடைபெறும் என்று பெங்களூர் மாநகராட்சி (பிபிஎம்பி) அறிவித்திருந்தது.

Aero India – 2023
Aero India 2023 Representative Image

இந்த நிகழ்ச்சியின் போது இறைச்சிக்காக வைத்திருக்கும் பறவைகள் நடுவானில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக யெலஹங்கா விமானப்படை நிலையத்திலிருந்து 10 கி.மீ சுற்றளவில் அனைத்து இறைச்சி, கோழி, மீன் கடைகளையும் மூடுவது மற்றும் அசைவ உணவுகளை வழங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் பெங்களூர் சிவில் அமைப்பு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறுவது தண்டனைக்கு வழிவகுக்கும் என்றும் குடிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த தடையை மீறினால் இந்திய விமான விதிகள் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்கப்படும் என்று பிபிஎம்பி தெரிவித்தது.

Meat Sale Ban 2
Representative Image

2021 ஆம் ஆண்டில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நிகழ்ச்சி தடைப்பட்டிருந்தது. இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சிக்கு அதிக அளவில் மக்கள் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான கண்காட்சி ஐந்து நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது. கண்காட்சியின் முதல் மூன்று நாட்கள் நிகழ்ச்சியை முன்பதிவு செய்த பார்வையாளர்களும், இறுதி இரண்டு நாட்களில் பொது மக்கள் விமான கண்காட்சியை  பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment