தொடர் அமளியால் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு.!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2023:

எதிர்க்கட்சி எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லா மீது, காகித துண்டுகளை வீசி அமளியில் ஈடுபட்டதால், மக்களவை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இரு அவைகளும் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலங்களவை தொடங்கியவுடன் புது டெல்லியில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற நிகத் ஜரீன், லோவ்லினா, நீது மற்றும் ஸ்வீட்டி ஆகியோருக்கு ராஜ்யசபாவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர், நேற்றய தினம் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்ட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், நேற்றுடன் 10-வது நாளாக நாள் முழவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடங்க இருக்கும் இரு அவைகளிலும் அதே நிலமை தான் நிலவக்கூடும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment