அடேங்கப்பா ..!ரேஷன் கடை துவரம் பருப்பில் வடை செய்யலாமா?

துவரம் பருப்பு வடை -ரேசன் கடை துவரம்  பருப்பில் வடை செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.

தேவையான பொருள்கள்:

  • ரேஷன் துவரம்  பருப்பு =400கிராம்
  • வெங்காயம்  =4
  • பச்சைமிளகாய் =4
  • இஞ்சி =1 இன்ச்
  • பூண்டு =7 பள்ளு
  • முருங்கை கீரை =சிறிதளவு
  • கொத்தமல்லி இலை =சிறிதளவு
  • சோம்பு =1 ஸ்பூன்
  • பெருங்காயம் =1/2 ஸ்பூன்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி ஒன்றை மணி  நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு ஊற வைத்த பருப்புடன் பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றி  பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டை இடித்து சேர்க்கவும்.

அதனுடன் முருங்கைக் கீரை ,கொத்தமல்லி இலைகள், உப்பு ,பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்தவற்றை ஒன்றாக்கி வைத்து விட்டு, ஒரு பாத்திரத்தில் பொறிக்க  தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு காய்ந்த எண்ணெயில் பிசைந்த மாவை வடை போல் தட்டி போட்டு  எடுத்தால் கிருப்சியான  ரேஷன் கடை துவரம் பருப்பு வடை ரெடி.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.