ஹீரோவாக அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி.!

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் குருதி ஆட்டம்,பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் இவரது தம்பியும் , மறைந்த முரளியின் இரண்டாவது மகனுமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தை ஆகாஷின் மாமானாரும் , மாஸ்டர் படத்தினை தயாரித்த XB பிக்ச்சர்ஸின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . சமீபத்தில் தான் இவரது மகளுக்கும், ஆகாஷ் முரளிக்கும் திருமணமானது குறிப்பிடத்தக்கது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.