அதானி – ராகுல் காந்தி விவகாரம்.! கடும் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு…

நாடாளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 1 நிமிடத்தில், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடளுமன்றத்தில் இன்று அதானி குழும விவகாரம் மற்றும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் குறித்து எதிர் கட்சினர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் தொடங்கிய ஒரு நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது. அதாவது, ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. நாடளுமன்றத்திற்கு அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கருப்பு உடை அணிந்து வருகை தந்திருந்தனர்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரணை கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முழக்கங்களுக்கு மத்தியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பட்ஜெட் மசோதாவை நிறைவேற்றினார். இந்நிலையில், மக்களவையின் அடுத்த அமர்வு, இன்று காலை 11 மணிக்கு நடைபெறுவதாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள குறித்து எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனைக்கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்றது. மேலும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்திற்கு, தங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று நாடாளுமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment