,

ஒரு நாள் வீழ்ச்சிக்கு பின் உயர்ந்த அதானி குழுமப் பங்குகள்.!

By

பங்குச்சந்தை : மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர், அதானி போர்ட்ஸ், அதானி கியாஸ், அதானி வில்மர், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அம்புஜா சிமெண்ட்ஸ் என பல்வேறு அதானி பங்குகள் 9 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை குறைந்தது.

இதனை தொடர்ந்து, இன்றைய தினம் காலை மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,602.23 புள்ளிகள் உயர்ந்து 73,681.27 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வந்தது. அதே போல தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்ட்டி 494.15 உயர்ந்து 22,378.65 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றுது.

இந்நிலையில், இன்றை நாள் வர்த்தகத்தின் முடிவில், நேற்று ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து மீண்டு, 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 2,303.19 புள்ளிகள் உயர்ந்து 74,382.24-ல் நிலைபெற்றது. பகலில், 2,455.77 புள்ளிகள் பெரிதாகி 74,534.82 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் வீழ்ச்சிக்கு பின் உயர்ந்த அதானி கிரீன் பங்கு 11% உயர்ந்துள்ளது.

அதன்படி, அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் 11.01 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 8.59 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 7.47 சதவீதமும், குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் 6.02 சதவீதமும் பிஎஸ்இயில் உயர்ந்தன.

ஏசிசி பங்கு 5.20 சதவீதம் உயர்ந்தது, என்டிடிவி 3.26 சதவீதம் உயர்ந்தது, அதானி டோட்டல் கேஸ் 2.67 சதவீதம் உயர்ந்தது, அதானி வில்மர் 0.77 சதவீதம் முன்னேறியது, அதானி பவர் 0.32 சதவீதம் உயர்ந்தது.

Dinasuvadu Media @2023