நடிகைகள் செல்போன்கள் பறிமுதல்..!

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையின் போது பாலிவுட் திரையுலகில் பலர் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து, சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பப்பட்டது. அதில், நேற்று முன்தினம் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனின் மேலாளரான கரிஷ்மா பிரகாஷ் ஆஜர் ஆனார்.

நேற்று நடிகை தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். இந்நிலையில்,  தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், கரிஷ்மா பிரகாஷ் உள்ளிட்ட 7 பேரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

author avatar
murugan