vani bhojan

கதைக்கு தேவைன்னா படுக்கையறை காட்சியில் கூட நடிப்பேன்! நடிகை வாணி போஜன் ஓபன் டாக்!

By

நடிகை வாணி போஜன் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் இப்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார். கடைசியாக இவர் பரத்திற்கு ஜோடியாக லவ் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை.

   
   

லவ் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை வாணி போஜன் கேசினோ, ஆர்யன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அதைப்போல சில படங்களில் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார்.  இதற்கிடையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை வாணி போஜன் படுக்கையறை காட்சியில் நடிக்க வாய்ப்பு வந்தால் அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகை வாணி போஜன் ” பொதுவாகவே இந்த மாதிரியான காட்சிகள் கதைக்கு தேவைப்படுகிறது என்றால் வைக்கலாம். ஏனென்றால், படம் பார்ப்பவர்களுக்கு இந்த காட்சிகளை படத்துடன் பார்க்கும்போது எதுவும் தெரியாமல் இருப்பது போல காட்டவேண்டும். மற்றபடி, படத்திற்கு தேவை இல்லாமல் அப்படி ஒரு காட்சிகளை வைப்பது தவறு.

லியோ திரைப்படம் வெளிநாடுகளில் எவ்வளவு வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

எனவே, கதைக்கு தேவை என்றால் நான் அப்படி ஒரு காட்சியில் நடிப்பேன். ஏனென்றால், எனக்கு பணம் என்பது முக்கியம் இல்லை ஒரு கதாபாத்திரத்தில் எப்படி நடிக்கிறோமா அது தான் முக்கியமான விஷயம். என்னை பொறுத்தவரை கதைக்கு தேவைப்பட்டால் அந்த மாதிரி காட்சியில் நடிப்பேன்” என நடிகை வாணிபோஜன் தெரிவித்துள்ளார்.

இதைப்போல மற்றோரு பேட்டியில் கிளாமர் குறித்து அவர் பேசுகையில் ” கிளாமர் என்பது தவறான விஷயம் இல்லை. ஒருத்தர் அழகாக சிரித்தாள் கூட அது கிளாமர் தான். ஒரு சிலர் கண்கள் அழகாக இருக்கும் எனவே, நாம் பார்ப்பதில் தான் இருக்கிறது. மற்றபடி என்னைப்பொறுத்தவரை கிளாமர் என்பதில் எந்த தவறும் இல்லை” என பேசிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023