மூன்று லட்சம் நிதியுதவி அளித்த நடிகை தமன்னா.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது, மேலும் தற்போது ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அணைத்து படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலை நிறுத்தமும்  செய்யப்பட்டுள்ளது. தினசரி வேலைக்கு சென்று தினசரி சம்பளம் வாங்கி வாழ்க்கையை நடத்துபவர்களின் வாழ்வும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரனாவால் பாதிக்கப்பட்ட திரைப்படதுறை ஊழியர்களுக்கும், கொரோனா தடுப்பு நிதியாக அரசுக்கும் உதவி தொகையை வழங்கியதை நாம் அறிவோம் .அதில் பாலிவுட், கோலிவுட் பிரபலங்களும் அடங்கும். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. இவர் கொரோனா தடுப்பு நிதியாக TFI தினசரி கூலி தொழிலாளர்களின் நலனுக்காக ரூ. 3 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.