நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி வழிபாடு செய்வதற்காக சென்றுள்ளார். அதற்கான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பதிக்கு கீர்த்தி சுரேஷ் வந்ததை பார்த்த ரசிகர்கள் அவரை பார்க்க கூட்டமாக அப்பகுதியில் கூடினார்கள்.

ரசிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். சாமி வழிபாடு செய்து முடித்தபிறகு கீர்த்தி சுரேஷ் அங்கிருந்து வீட்டிற்க்கு சென்றார். கீர்த்தி சுரேஷ் மேக் -அப் கூட போடாமல் கோவிலுக்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மேக்கப் இல்லாமலே நீங்க வேற லெவல் கீர்த்தி…என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதி ஸ்டாலினிக்கு ஜோடியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான இரண்டாவது பாடல் கூட இன்று வெளியானது. மாமன்னன் படத்தை தொடர்ந்த்தி கீர்த்தி சுரேஷ் ரகுதாத்தா எனும் படத்திலும் நடித்துமுடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Keerthy Suresh#KeerthySuresh #KeerthySureshhot #Keerthy #keerthyhot pic.twitter.com/1E8RIuMmoM
— Keerthy & Kalyani (@KeerthyNKalyani) May 27, 2023