புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா… 21 ஆதீனங்களின் தலைவர்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.!

செங்கோலை பிரதமரிடம் ஒப்படைக்க 21 ஆதீனங்களின் தலைவர்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பிரதமரிடம் செங்கோலை வழங்குவதற்காக, சென்னை விமான நிலையத்தில் இருந்து 21 ஆதீனங்களின் தலைவர்கள் டெல்லிக்கு  புறப்பட்டுச் சென்றனர். விழாவில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம், பழனி ஆதீனம், விருத்தாசலம் ஆதீனம், திருக்கோயிலூர் ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்களின் தலைவர்கள் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர்.

பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி (நாளை) புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் புனிதமான செங்கோல், மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்படுகிறது. இதற்காக மதுரை ஆதீனத்தின் 293வது தலைமை அர்ச்சகரால் செங்கோல் பிரதமர் நரேந்திர மோடியிடம், வழங்கப்படுகிறது.

முன்னதாக 1947இல் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் சின்னம் புனித செங்கோல் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாபுனித செங்கோல் குறித்து தெரிவித்திருந்தார்.

author avatar
Muthu Kumar