நடிகர் சங்க தேர்தல் என்னால் வாக்களிக்க முடியாது..!

தபால் வாக்குபடிவம் மாலை 6.45க்கு கிடைத்ததால் தன்னால் வாக்களிக்க இயலவில்லை என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்
நாளை நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் சில கடுமையான கட்டுபாடுகளுடன் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நாளை நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.அதில் இன்று மாலை 5.30 மணியுடன் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான நேரம் முடிவடைந்து விட்டது. இதனால் துரதிர்ஷ்டவசமாக, என்னுடைய வாக்கை பதிவு செய்ய இயலவில்லை தபால் வாக்கு தாமதமாக மாலை 6.45க்கு வந்திருக்கக் கூடாது  என்று நடிகர் ரஜினி வேதனை தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் ரஜினி மும்பையில் படப்பிடிப்பு ஒன்றில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
kavitha