யூடியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்ட நடிகர் அக்சய்குமார்..!

பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக் என்ற வாலிபர் யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த யூ-டியூப் சேனல் மூலம் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார், அந்த கொலையில் முக்கிய பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

சுஷாந்த் சிங் வழக்கில், அவரது காதலியான நடிகை ரியா சக்ரவர்த்தி கனடா செல்ல அக்‌ஷய் குமார் உதவியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த நான்கு மாதங்களில், சுஷாந்தின் போலி வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றுவதன் மூலம் ரஷீத் ரூ .15 லட்சம் சம்பாதித்துள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் யூடியூபருக்கு எதிராக ரூ .500 கோடிக்கு அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட போலி வீடியோவை யூடியூபர் ரஷீத் சித்திகி பகிர்ந்துள்ளார். அவதூறு வீடியோக்களால் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கம், மன அழுத்தம் போன்றவற்றால் ரூ.500 கோடி அளவுக்கு அக்‌ஷய் குமார் இழந்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிரா ஆதித்ய தாக்கரே மற்றும் மும்பை போலீசாருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக ரஷித் சித்திக் மீது ஏற்கனவே  வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர், இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan