“பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை” – பைடன் உறுதி!

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதனைதொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவி ஏற்றார்.

மேலும் ஜோ பைடன், அடுத்தாண்டு ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி தனது அதிபர் பதவியேற்க உள்ளார். அதற்கு இன்னும் 72 நாட்கள் உள்ளன. இந்நிலையில், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் வெள்ளிவிழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அப்பொழுது, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும், அது தொடர்பான கொரோனாவை கட்டுப்படுத்தும் முன்னணி அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் பட்டியலை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.