பயணிகளுக்கு வந்த விபத்து புகைப்படங்கள்.! தாமதமான துருக்கி விமானம்.!

பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு விபத்துக்குள்ளான விமானத்தின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டதால் துருக்கி செல்லும் விமானம் தாமதமானது.

இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து துருக்கி செல்லும் பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு விபத்துக்குள்ளான விமானத்தின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டதால் விமானம் புறப்பட தாமதமானது. இந்த புகைப்படங்கள் ஆப்பிள் ஏர் டிராப் மூலம் இஸ்ரேலில் பயணிகளின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டது.

அந்த படங்களில் ஒன்று 2009 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த ஹட்சன் ரிவர் விமான விபத்தின் படமாகும். அதில் “நாங்கள் அனைவரும் இறந்துவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அரபு மொழியில் ஒரு செய்தியும் எழுதப்பட்டிருந்தது. விபத்திற்குள்ளான விமானத்தின் புகைப்படங்களைப் பார்த்த மக்கள் மிகவும் பயந்தனர்.

இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய நபர் உட்பட மேலும் ஒன்பது பயணிகளும் விமான நிறுவனம் மற்றும் காவல்துறையினரின் வேண்டுகோளின்படி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.  அவர்கள் பென் குரியன் விமான நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பயணிகளின் பொருள்கள் சோதனை செய்யப்பட்ட பிறகு பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment