யமுனை ஆற்றில் விபத்து.! 9 உடல்கள் மீட்பு.! உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்ப.!

யமுனை நதிக்கரையில் கடந்த வியாழன் ஏற்பட்ட படகு விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த வியாழக்கிழமை அன்று  உத்தரபிரதேச மாநிலம் பண்டா பகுதியில், யமுனை நதியில் படகில்  அளவுக்கு அதிகமானோர் பயணித்த போது விபத்து ஏற்பட்டது.

ரக்சா பந்தன் விழாவை முன்னிட்டு படகில் அதிகமானோர் பயணித்ததாக கூறப்பட்டது. காற்று அதிகமாக வீசியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் படகில் பயணித்த கிட்டதட்ட 40க்கும் அதிகமானோர் இந்த விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில், நீச்சல் தெரிந்தவர்கள் மட்டும் அங்கிருந்து நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.

நேற்று மட்டும் நீரில் மூளைக்கு உயிரிழந்ததில், 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இதனால் தற்போது வரை 9 பேரின் உடல்கள் மீட்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விபத்தில் சிக்கியவர்களை தேடும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய்  நிவாரணமாக வழங்கப்படும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment