மூடுபனியால் வாகனங்கள் மோதி விபத்து..! பரபரபான சம்பவம்..!

ஆக்ரா-கான்பூர் நெடுஞ்சாலையில் மூடுபனி காரணமாக குறைந்தது 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது.

டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக சாலைகள் முற்றிலுமாக பனியால் மறைக்கப்பட்டதால் விபத்துகள் பெருமளவில் நடக்கின்றன. இந்நிலையில் உத்திர பிரதேசம் ஆக்ராவிலிருந்து கான்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் அடர்ந்த மூடுபனி காரணமாக கிட்டத்தட்ட 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு எட்டாவாவிலிருந்து மதுராவுக்குச் சென்று கொண்டிருந்த மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்தும் ஏற்கனவே மோதலில் சிக்கிய டிரெய்லர் டிரக் மீது மோதியுள்ளது. பயணிகளுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

மாநில அரசின் சுரங்கத் துறையின் அதிகாரிகள் சோதனைக்காக ஒரு லாரியை நிறுத்தியதால் அதன் பின்னால் வந்த வாகனங்கள் அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment