ரசாயன கிடங்கில் பற்றிய தீ… அடுக்குமாடி குடியிருப்பு வரை தீ பரவி 6 பேர் உயிரிழப்பு.!

தெலுங்கானா மாநிலம் ஹைதிராபாத், நம்பள்ளி எனும் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்று இருக்கிறது. அதன் தரை தளத்தில் ராசாயனங்கள் கொண்ட டிரம்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளன.

இன்று அதிகாலை அந்த ரசாயன டிரம்களில் தீ விபத்து ஏற்பட்டு,  அந்த தீயானது அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தீ பற்றி அந்த இடம் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீபாவளி இரவு… கன்னியாகுமரியில் ராஜீவ்காந்தி சிலை உடைப்பு.!

 கோவிகுடா மற்றும் லாங்கர் ஹவுஸில் இருந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து  தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தீ விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்கள் மீட்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

4 பேர் ரசாயன கிடங்கில் வேலை செய்து வந்தவர்கள் என்றும், 2 பேர் குடியிருப்புகளில் வசித்து வந்தவர்கள் என்றும் கூறபடுகிறது. தீயை இன்னும் முழுதாக அணைக்கவில்லை என்பதால், மேலும் உயிரிழப்புகள் கூடும் என அஞ்சப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.