கேப்டன்களில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் ஆரோன் பிஞ்ச் முதலிடம்

நேற்றைய போட்டியில் இலங்கை அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இந்தப் போட்டியானது  லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய  ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் குவித்தனர்.பின்னர் இறங்கிய இலங்கை அணி 45.5 ஓவரில் 247 ரன்கள் எடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 132 பந்திற்கு 153 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.அதில் 15 பவுண்டரி, 5 சிக்ஸர் அடங்கும்.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் கேப்டன்களில் அதிக ரன்கள் அடித்தவர்களில் முதலில் ஆரோன் பிஞ்ச் இருந்தார். பின்னர் அந்த இடத்திற்கு கோலி முதல் இடம் பிடித்தார். தற்போது கோலியை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.
153 – Finch vs SL
82 – Kohli vs AUS
82 – Finch vs PAK
 

author avatar
murugan