சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் அமீர்? உண்மையை உடைத்த வெற்றிமாறன்!

நடிகர் சூர்யாவுக்கு வில்லனாக இயக்குனர் அமீர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வாடிவாசல்

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள ‘வாடிவாசல்’ இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகி சில ஆண்டுகளே ஆகிவிட்ட நிலையில் இன்னும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்காமலே இருக்கிறது.

அதற்கு காரணம் வெற்றிமாறன் மற்றும் சூர்யா தாங்கள் இருவருமே கமிட்டாகி உள்ள படங்களை முடிக்காமல் இருக்கிறார்கள். இருவரும் தாங்கள் கமிட்டாகி இருக்கும் படங்களை முடித்த பிறகு வாடிவாசல் படத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமான கதாபாத்திரத்தில் அமீர்

இதற்கிடையில்,  வாடிவாசல் படத்தில் நடிகர் அமீர் நடிப்பதாக முன்னதாகவே ஒரு தகவல் பரவி வந்த நிலையில் , அதனை உறுதிப்படுத்தும் வகையில் வெற்றிமாறன் படத்தில் அமீர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். அமீர் இயக்கும் ‘மாயவளை’படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

அதில் சிறப்பு கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல்  திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீர் நடிக்கிறார். வடசென்னை படத்தில் அவருடைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு இருந்ததோ அதேபோலவே இந்த வாடிவாசல் படத்திலும் அவருடைய கதாபாத்திரம் இருக்கும் எனக் கூறியுள்ளார். எனவே, அவர் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாடிவாசல் டெஸ்ட் ஷூட்

வாடிவாசல் படத்திற்கான டெஸ்ட் ஷூட் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா மாடு மற்றும் மாடு பிடி வீரர்களுடன் களத்தில் இறங்கி நடித்து காட்டினார். அதற்கான சிறிய வீடியோ ஒன்றையும் படக்குழு முன்னதாகவே வெளியாகி இருந்தது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.