கோதுமை பாக்கெட்டில் பணம் வைத்ததாக கூறியது போலி – நடிகர் அமீர்கான்..!

அமீர்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில் நண்பர்களே, நான் கோதுமை பாக்கெட்டில் பணத்தை வைக்கவில்லை என்று ட்வீட் செய்துள்ளார்.

கொரோனா தொற்றால் உலக நாடுகள் பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமீர்கான் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு கிலோ கோதுமை மாவு வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை  பல ஏழை மக்கள்  வாங்கி சென்றதாகவும், அந்த கோதுமை பாக்கெட்டில் ரூ. 15000 பணம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. 

தற்போது இந்த செய்தி பொய் என்று கூறி நடிகர் அமீர்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில் நண்பர்களே, நான் கோதுமை பாக்கெட்டில் பணத்தை வைக்கவில்லை என்றும், இது முற்றிலும் போலி கதை என்றும், பாதுகாப்பாக இருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். இதிலிருந்து அமீர்கான் இதை செய்யவில்லை என்றும் வதந்தி என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.