காதலனின் கண்முன்னே கதற கதற பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!

வேலூரில் உள்ள கோட்டையில் இரவு தனியாக இருந்த காதல் ஜோடியை தாக்கிய மர்ம

By sulai | Published: Jan 22, 2020 03:55 PM

  • வேலூரில் உள்ள கோட்டையில் இரவு தனியாக இருந்த காதல் ஜோடியை தாக்கிய மர்ம கும்பல்.
  • பின்னர் காதலனின் கண்முன்னே பெண்ணை பலாத்காரம் செய்த 3 பேர் கொண்ட கும்பல்.வளைத்து பிடித்த காவல்துறையினர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் ஆவார்.இவர் வேலூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.இவரும் அதே ஜவுளிக்கடையில் பணியாற்றி வரும் இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி இரவு 9 மணியளவில் வேலூரில் உள்ள கோட்டையில் இருவரும் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் காதலனை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அந்த கும்பல் காதலனின் கண்முன்னே அந்த இளம்பெண்ணை கதற கதற பலாத்காரம் செய்துவிட்டு அவரிடம் இருந்த செயின், கம்மல், செல்போன்களை பறித்துக் கொண்டு சரமாரி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்துள்ளனர். பின்னர் வேலூரில் உள்ள வசந்தபுரத்தை சேர்ந்த அஜித் ,சக்தி ,மணி ஆகிய மூவரும் இணைந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட மூவரும் இரவு நேரங்களில் கோட்டையில் தனியாக இருக்கும் ஜோடிகளிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் முதலியவற்றை பறித்து செல்பவர்கள் என  விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Step2: Place in ads Display sections

unicc