டெல்லியில் டீக்கடை தொடங்குவதற்காக உயரிய பதவியை விட்டுவிட்டு வந்த பெண்..!

டெல்லியில் டீக்கடை தொடங்குவதற்காக பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலையை விட்டுவிட்டு வந்த பட்டதாரி பெண். 

டெல்லியை சேர்ந்தவர்  ஷர்மிஸ்தா கோஷ். இவர் எம்.ஏ  முதுகலை பட்டம் பெற்றுள்ளார். நல்ல ஆங்கில திறன் கொண்ட இவருக்கு பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை கிடைத்துள்ளது. இவருக்கு நல்ல சம்பளம் வழங்கப்பட்டு வந்தாலும் இவர் வேலை பார்த்த இடம் மிகப்பெரிய இடம் என்றாலும் தனக்கென்று சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இவரிடம் இருந்து வந்துள்ளது.

இதனால், தான் டீக்கடை வியாபாரத்தை தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். டெல்லி கான்ட்ஸ் கோபிநாத் பஜாரில் ஷர்மிஸ்தா சொந்தமாக சிறிய அளவில் ஒரு டீ கடை தொடங்கியுள்ளார். இந்த டீக்கடையை தொடங்குவதற்காக பிரிட்டிஷ் கவுன்சில் வேலையும் விட்டுவிட்டு இந்த தொழிலை செய்துள்ளார்.

இந்த டீக்கடை மூலமாக தற்போது நல்ல வருமானம் வருவதாகவும் அந்த டீக்கடையில் தனது நண்பர் உறுதுணையாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். டீக்கடை மட்டுமின்றி பல்வேறு சிற்றுண்டிகளை செய்து விற்பனை செய்து வந்துளளர். மேலும், டெல்லியில் மட்டுமின்றி பல இடங்களிலும் தனது டீக்கடையை தொடங்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment