12 தமிழக மீனவர்கள் விடுதலை.! இலங்கை நீதிமன்றம் உத்தரவு.!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. 

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேல்மயில் என்பவருக்கு சொந்தமான விசைப்படையில் வேல்மயில், ஆனந்த மணி, ராஜா, ரவி உள்ளிட்ட 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது, ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர்  தமிழக மீனவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக அரசும் , மத்திய அரசும் தொடர்ந்து கோரிக்கை வைத்து இருந்தது.

இந்நிலையில், இன்று இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில், கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் விடுதலை செய்வதாகவும், அவர்களின் விசைப்படகு அரசுடைமையாக்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து 12 தமிழக மீனவர்கள் யாழ்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர். இந்திய தூதரகம் மூலம் மீனவர்கள் தமிழகம் வந்தடைவார்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment