நெற்பயிரை நவ.15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டுகோள்!

பயிர் சேதமடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது என்று விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை அறிவுறுத்தல்.

தமிழ்நாட்டில் சம்பா, தாளடி, பிசான பருவ நெற்பயிரை நவ.15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 27 மாவட்ட விவசாயிகள் நெற்பயிரை நவ.15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுபோன்று, மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், தேனி, செங்கல்பட்டு, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளும் நெற்பயிரை நவ.15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் புயல், வெள்ளத்தால் பயிர் சேதமடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது என்றும் விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்கள் சம்பா பயிரை காப்பீடு செய்துகொள்ள உழவர் நலத்துறை விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment