ரன் கொடுக்காமல் 6 விக்கெட்டை பறித்து சாதனை படைத்த வீராங்கனை

நேபாள மகளிர் அணி மற்றும் மாலத்தீவு  மகளிர் அணியில் இடையே தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வீராங்கனை ஒருவர்  யாரும் எதிர்பார்க்காத சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய மாலத்தீவு பெண்கள் அணி 11ஓவர்களில் வெறும் 16 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும்  இழந்தது.இப்போட்டியில் நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் 2.1 ஓவர் வீசி ஒரு ரன்கள் கூட கொடுக்காமல் 6 விக்கெட்டை பறித்துள்ளார்.

இதன் மூலம் மகளிர் டி 20 போட்டிகளில் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலத்தீவு  மகளிர் அணி வீராங்கனை மாஸ் எலிசா  வெறும் 3 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டை பறித்து இருந்தார். அந்த சாதனையை  தற்போது அஞ்சலி சந்த் முறியடித்துள்ளார்.

பின்னர் இறங்கிய நேபாள அணி 5 பந்தில் 17 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீரர்  தீபக் சாஹர்  வெறும் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இது ஆண்கள் டி20 போட்டியில் சாதனையாக இருந்தது. இதற்கு முன் இலங்கை வீர அஜந்தா மெண்டீஸ் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan