Saturday, June 1, 2024

டி20 உலகக்கோப்பைக்கு முன் ஒரு பயிற்சி ஆட்டம்? சிக்கலில் இந்திய அணி !!

சென்னை : வரவிற்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி போட்டியில் மட்டும் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்திய அணிக்கு இதனால் சிக்கல் இருப்பதாகவும் தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் தொடரானது வருகிற மே-26ம் தேதியோடு முடிவடையும் நிலையில் தொடர்ந்து அடுத்த வாரத்திலேயே இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்காக அமெரிக்கா செல்ல உள்ளனர். ஜூன்-1 ம் தேதி தொடங்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன்-29 வரை நடைபெற உள்ளது. தற்போது, இதில் இந்திய அணிக்கு சிக்கல் என்னவென்றால் ஐசிசி புளோரிடாவில் வார்ம்-அப் அதாவது பயிற்சி போட்டிகளுக்காக ஐசிசி திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியா அணி ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் அணியுடன் கடைசியாக சர்வேதச டி20 தொடரை விளையாடியது. அதன் பிறகு ஒரு சர்வேதச போட்டியாக இந்திய அணி எந்த ஒரு டி20 போட்டியலும் விளையாடவில்லை. இதனால், ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் எந்த ஒரு பயிற்சியும் செய்யாமல், ஓய்வும் இல்லாமல் நேரடியாக டி20 உலகக்கோப்பையை விளையாடுவதால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படலாம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், எந்த ஒரு ஐசிசி பெரிய தொடரானது நடைபெற்றாலும் அதற்கு முன்னதாக 2 பயிற்சி போட்டிகளையாவது கலந்து கொள்ளும் அணிகள் விளையாடுவராகள். ஆனால் இந்திய அணிக்கு நேரம் இல்லாத காரணத்தால் ஒரே ஒரு பயிற்சி போட்டியில் மட்டும் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிகிறது. அந்த ஒரு போட்டியையும் நியூயார்க்கில் நடத்த வேண்டும் என பிசிசிஐ அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிகிறது.

ஏனென்றால், இந்திய அணி தங்களது பிரிவில் மொத்தம் 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் 3 போட்டிகளை நியூயார்க்கில் விளையாடவுள்ளதால், பிசிசிஐ இந்திய அணி விளையாடும் அந்த ஒரு பயிற்சி ஆட்டத்தை நியூயோர்க்கில் நடத்துமாறு பரிந்துரை செய்வதாக தெரிகிறது. இதனால், முழு இந்திய அணியும் போட்டிக்கு ஃபிட்டாக வந்தாலும், பயணத்தை குறைப்பதற்காக பிசிசிஐ இவ்வாறு பரிந்துரை செய்கிறது என கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சுகள் நிலவுகிறது.

மேலும், ஐசிசி இந்த பயிற்சி போட்டிகளுக்கான தேதிகளை பின்னரே அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.  இறுக்கமான இந்த திட்டமிடலுக்குப் பின்னால் இந்திய அணி எவ்வாறு இந்த டி20உலகக்கோப்பை தொடரை கையாள போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்தே நாம் பார்க்க வேண்டும். மேலும், இந்திய அணி இந்த டி20 தொடருக்கான தங்களது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை  வருகிற ஜூன்-5ம் தேதி அன்று நியூயார்க்கில் சந்திக்க உள்ளது.

RELATED ARTICLES