பைக்கிற்கு ரூ.10,000 அபராதம்.! போலீசார் வாகனத்தை தீ வைத்து கொளுத்திய போதை ஆசாமி.!

காங்கேயம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் 10 ஆயிரம் அபராதம் விதித்ததால் போலீசார் வாகனத்துக்கு ஒருவர் தீ வைத்த சம்பவம் அங்கு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.  

தற்போது தமிழகத்தில் புதிய வாகன சட்டம் அமலில் இருப்பதால், அதன் அபராத தொகை முன்பை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனை நாம் அவ்வப்போது செய்திகளில் பார்த்து வருகிறோம்.

அண்மையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாம்பவலசை பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்துள்ளார். இதனால் போலிசார் அவருக்கு புதிய வாகன சட்டத்தின் படி 10,000 அபராதம் விதித்து வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர் .

அதன் பிறகு, காங்கேயம் புறக்காவல் காவல் நிலையம் முன்பு இரண்டாம் நிலை காவலர் ரமேஷ் என்பவரது இருசக்கர வாகனம் அங்கு நின்றுள்ளது. அந்த வாகனத்துக்கு தமிழ் செல்வன் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில், காவலர் ரமேஷின் இருசக்கர வாகனம் முழுவதும் சேதமடைந்து விட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment