கட்டாயம் படிக்க வேண்டிய தரவு! இன்னும் 45,180 கிராமங்களில் 4G சேவையே இல்லை – மத்திய அரசு

நாட்டில் இன்னும் 45,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4ஜி சேவை இல்லை என்று மத்திய அரசு தகவல்.

இந்தியாவில் இன்னும் 45,180 கிராமங்களில் 4G சேவை கிடைக்காமல் உள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஒடிசாவில் 7,592 கிராமங்களுக்கு 4ஜி சேவை கிடைக்காமல் உள்ளது. தமிழகத்தில் வெறும் 572 கிராமங்களுக்கு மட்டுமே 4G சேவை இல்லை என கூறப்பட்டுள்ளது.

மேலும், குஜராத்தின் அத்தனை முக்கிய நகரங்களுக்கும் 5G சேவை வழங்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் 821 கிராமங்களில் 4G சேவை கூட இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே, நாட்டில் 93% கிராமங்கள் 4ஜி சேவையை பெற்றுள்ளன எனவும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment