நவீன யுக கட்டடம் 35 ஆண்டுகள் மட்டுமே பயன்படுகிறது..! – நீதிமன்றம் அவேதனை

மதுரை திருமங்கலம் பேருந்து நிலைய கட்டடம் தொடர்பான வழக்கை  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். மதுரை திருமங்கலம் பேருந்து நிலைய பகுதியில் எத்தனை விபத்துகள் நடந்துள்ளன என அறிக்கை தர  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை விபத்துகள் நடந்துள்ளன என்று அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், திருமங்கலம் பேருந்து நிலையத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய திருச்சி என்ஐடி நிபுணர் குழு அமைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்து அதன் ஆயுட்காலத்தை தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில், 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள், அணைகள் இன்றும் கம்பீரமாக உள்ளன; ஆனால், நவீன யுகத்தில் கட்டப்படும் கட்டடம் 35 ஆண்டுகள் மட்டுமே பயன்படும் வகையில் இருக்கிறதென்றால், நாம் எங்கு செல்கிறோம் என தெரியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.