தமிழகத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ள நடமாடும் சுடுகாடு..!

சடலத்தை எளிதாக தகனம் செய்யும் வகையில், நடமாடும் இடுகாடு தமிழகத்தில் முதல்முறையாக ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாகவே இன்று பல கிராமங்களில் சடலங்களை எரிப்பதற்கு சுடுகாட்டுக்கு செல்வதற்கு வெகு தொலைவில் இடுகாடு இருப்பதாலும், சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை காணப்படுவதையும் நாம் செய்திகள் வாயிலாக அறிந்து கொள்கிறோம்.

இந்த நிலையில் சடலத்தை எளிதாக தகனம் செய்யும் வகையில், நடமாடும் இடுகாடு தமிழகத்தில் முதல்முறையாக ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டு மாவட்டத்தில் நடமாடும் மயான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மரணம் குறித்த தகவல் அவர்களுக்கு கொடுக்கப்பட்டால், அவர்கள் வீடுகளுக்கு அந்த மயான வாகனத்தை கொண்டு சென்று சடலத்தை எரியூட்டி ஒரு மணி நேரத்தில் அஸ்தியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கட்டணமாக ரூ.7500 வசூல் செய்து செய்கின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment