,

நியூயார்க்கில் 300 ஐபோன்களை வாங்கிய நபரிடம் சில நிமிடங்களில் கொள்ளை சம்பவம் ..!!

By

நியூயார்க்கில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் 300 ஐபோன்களை வாங்கிய நபரிடம் சில நிமிடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   
   

நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான ஆப்பிள் ஸ்டோரில் 27 வயது நபர் தனது கடைக்கு வழக்கமாக மொபைல் மற்றும் மற்ற உதிரிபாகங்கள் வாங்குவார். அந்தவகையில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் 300 ஐபோன்களை வாங்கியுள்ளார்.

அதன் பின்னர் மூன்று பைகள் நிறைய ஸ்மார்ட்போன்களுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​ஒரு கார் அவருக்கு அருகில் நின்றது.அந்த காரிலிருந்து இரண்டு பேர் வெளியே வந்து, வலுக்கட்டாயமாக பைகளை கேட்டுள்ளனர்.

அவர் பையை தர மறுத்ததால், கொள்ளை கும்பலில் ஒருவர் அவரது முகத்தில் குத்திவிட்டு மூன்று பைகளில்  ஒன்றை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார் .அந்த பையில் கிட்டத்தட்ட 125 ஐபோன்கள் இருந்துள்ளது.ஐபோன்களை திருடிய நபர்களை போலீசார் தேடிவருவதுடன், சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் நேரில் வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Dinasuvadu Media @2023