, ,
Ramanathapura school local holiday

ராமநாதபுரம் : ஆடி அமாவாசையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை.!

By

இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

   
   

தமிழ்மாதம் ஆடி முதல் நாளான இன்று இந்துக்கள் பலர் தங்கள் முன்னோர்களுக்கு வேண்டி கடற்கரைகள், நீர்நிலை கோவில் பகுதிகளில் சடங்கு சம்பிரதயங்கள் செய்வார்கள். குறிப்பாக ராமேஸ்வரம் கோவிலுக்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து பலர் தங்கள் முன்னோர்களுக்காக வருவார்கள்.

இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.இந்த உள்ளூர் விடுமுறையினை ஈடுகட்ட ஜூலை 22ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Dinasuvadu Media @2023