சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்த மனித வடிவிலான ரோபோ..!

கஜகஸ்தான் நாட்டில் உள்ள ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் மூலமாக ஃபெடோர் என்ற மனித உருவ ரோபோ அனுப்பப்பட்டது.

சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்வதற்காக 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளது.  அங்கு இந்த ரோபோ மின் இணைப்புகளை சரி செய்தல் , தீயணைப்பான்களை பயன்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட உள்ளது.

இந்த ரோபோ 1.8 மீட்டர் உயரமும், 160 கிலோ எடையும் கொண்டது ஸ்கைபோட் எஃப் 850 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டு உள்ளது.இந்நிலையில் ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்தை சென்றடைந்தது என நாசா அறிவித்து உள்ளது.

 

author avatar
murugan