முத்திரை பதித்த மாபெரும் வெற்றி…வசூல் மழையில் “கட்டாகுஸ்தி”.!

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஸ்னு விஷால் – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான திரைப்படம் “கட்டாகுஸ்தி”. வித்தியாசமான காமெடி கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

katakusthiImage Source Google

கடந்த 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் இரண்டாவது வரமாக வசூலை குவித்து வருகிறது. அதன்படி, இந்த திரைப்படம் வெளியான 12 நாட்களில் உலகம் முழுவதும்  எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

katakusthiImage Source Google

ஆம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் 12 நாட்களில் 9 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இரண்டு வரங்களை கடந்தும், இன்னும் 26 மாவட்டங்களில் 61 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

இதையும் படியுங்களேன்- ரொம்ப வருத்தம்….இதுதானால் தான் என்னுடைய திருமணம் நின்றது….மனம் திறந்த விஷால்.!

katakusthi Image Source Google

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 9 கோடி வசூல் செய்துள்ளது சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு படத்திற்கு கதை இருந்தால் கண்டிப்பாக வெற்றிபெறும் என்பது தெரியவந்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment