புதுச்சேரியில் பரபரப்பு! திடீரென சரிந்து விழுந்த 3 அடுக்குமாடி கட்டிடம்!

புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் அருகே கட்டப்பட்ட 3 மாடி கட்டிடம் அடியோடு சரிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி ஆட்டுப்பட்டியில் இருக்கும் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தான் சாவித்திரி இவர் அரசு இலவசமாக கொடுத்த இடத்தில் தனது சொந்த செலவில் 3 மாடி வீடு கட்டி வந்துஇருக்கிறார்.

வீடுகட்டும் கட்டுமான பணிகள் எல்லாம் முடிவடைந்த நிலையில், இந்த வீட்டின் புதுமனை புகுவிழா அடுத்த மாதம் நடைபெறவும் திட்டமிடப்பட்டு இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றோரு புறம் அந்த வீட்டின் அருகே செல்லும் கால்வாய்க்கு சுவர்க்கட்டும் பணிகளும் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது.

ராமர் கோயில் விழா நிகழ்வுகள்… கட்டட தொழிலாளர்கள் முதல் மோடிக்கு முதல் பிரசாதம் வரை…

கால்வாய்க்கு சுவர்க்கட்டும் பணியின் போது சாவித்திரி புதியதாக கட்டி இருந்த 3 மாடி வீட்டின் அருகே  மிகவும் ஆழமாக பள்ளமும் தோண்டப்பட்டுள்ளது. இதனால், அந்த சமயமே 3 மாடி வீடு லேசாக சாய்ந்தது. இதனையடுத்து, வீடு சாய்ந்தது குறித்து சுவர் கட்டும் ஒப்பந்ததாரரிடம் சாவித்திரி முறையிட்டும் வந்து இருக்கிறார்.

அதனை தொடர்ந்து இன்று வீடு இன்னும் வேகமாக சாய்ந்த காரணத்தால் இதனையுடைய தரத்தை ஆய்வு செய்வதற்காக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்துகொண்டிருந்தார்கள். அப்போது திடீரென 3 மாடி வீடு  சரிந்தது.

இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும்,  சரியான தரமின்றி இந்த 3 மாடி வீடு கட்டப்பட்ட காரணத்தால் வீடு சரிந்து விழுந்ததா? அல்லது பள்ளம் தோண்டப்பட்டதால் விழுந்ததா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஆசை ஆசையாக கட்டிய வீடு இடிந்து விழுந்ததால் வீட்டின் உரிமையாளர்கள் கண்கலங்கி அழுதனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.