Peru Tsunami

பெருவில் அதி பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை.!

By

சுனாமி எச்சரிக்கை : தென் அமெரிக்க நாடான பெருவில், இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் மையத்தின்படி, ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், மிகப்பெரிய கட்டடங்கள் குலுங்கியது.

இதனால், அச்சமடைந்த மக்கள், வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெருவியன் தலைநகர் லிமாவிற்கு தெற்கே சுமார் 600 கிமீ தொலைவில் உள்ள அட்டிகிபாவிற்கு கிழக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு, நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பெருவின் கடற்கரையை மூன்று மீட்டர் (10 அடி) வரை அலைகள் தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

இந்நிலையில், ஹைட்ரோகிராபி மற்றும் நேவிகேஷன் இயக்குநரகத்தின் தலைவர், குஸ்டாவோ கோர்டோவா, உள்ளூர் நெட்வொர்க் பக்ஸ்ட்ரெப்பிடம் ஆகிய பகுதிகளில் சுனாமி தாக்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்து.

Dinasuvadu Media @2023