கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.? விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.!

Delhi CM Arvind Kejriwal

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வேளையில், கடந்த வியாழன் அன்று சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. அதனை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கெஜ்ரிவால் ஜமீனுக்கு அடுத்த நாளே (வெள்ளி) தடை வாங்கியது.

இந்த ஜாமீன் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற கெஜ்ரிவால் தரப்பு இதனை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என கோரியிருந்தது. அதன் படி இன்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அப்போது, இந்த பிணை தொடர்பான வழக்கு ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் தற்போது உச்சநீதிமன்றம் இதில் தலையிட தேவையில்லை என்று கூறி, வழக்கை வரும் ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து உச்சநீதிமன்றம் செல்ல கெஜ்ரிவால் தரப்பு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi