ஆவின் பால் பண்ணைகளில் CCTV கேமரா நிறுவப்படும்..!

தரமான பால் கொள்முதலை உறுதிப்படுத்த, 17 மாவட்ட ஒன்றியங்களில் உள்ள 34 பால் குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் 341 தொகுப்பு பால் குளிர்விப்பான் நிலையங்களில் சிசிடிவி நிறுவப்பட உள்ளது.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 18 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, 300 பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையகங்களில் பால் மற்றும் பால் உபபொருட்கள் நுகர்வோர்களுக்கு எந்நேரமும் கிடைக்கும் வகையில் பாட்டில் குளிர்விப்பான்கள் மற்றும் ஆழ்நிலை உறை குளிர்விப்பான்கள் 150 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.Image result for CCTV

விருதுநகர் ஒன்றியத்தில் வெண்ணெய், நெய், பனீர் மற்றும் இந்திய வகை இனிப்புகள் தயாரிக்க ஏதுவாக புதிய பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை ஒன்று ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.  விழுப்புரம் ஒன்றியத்தில் குல்ஃபி ஐஸ்க்ரீம் தயாரிக்கும் வசதிகள் மற்றும் குளிர்பதன வசதிகளின் தரம் உயர்த்த ரூ.1 கோடி செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Related image

சென்னை பெருநகரம் மற்றும் புற நகர் பகுதிகளில் தற்போது நாளொன்றுக்கு விற்பனை செய்யப்படும் ஆவின் பால் அளவு 11.91 லட்சம் லிட்டர். அதனை 12.75 லட்சம் லிட்டராக உயர்த்த ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment