இனி சண்டை கிடையாது ! இந்தியா-பாகிஸ்தான் இடையே புதிய உடன்பாடு..!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. எனினும், இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே அடிக்கடி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில், இந்திய வீரர்களும் அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருவது வாடிக்கையான ஒன்றாக மாறியது.
இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டாலும் வீரர்கள் இழப்பு என்பது அதிகரித்த வண்ணமே இருந்தது. பயங்கரவாத தாக்குதல்களை விட பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் வீரர்கள் பலியாவது கூடுதலாக உள்ளது. குறிப்பாக, காஷ்மீரின் ரஜோரி, சம்பா, உரி ஆகிய பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகளவில் உள்ளது.
இந்நிலையில், இரு நாட்டு ராணுவ செயல்பாட்டுபிரிவு இயக்குநர் ஜெனரல்கள் மத்தியில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், எல்லை துப்பாக்கிச்சூடு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு போடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழு மூச்சாக கடைப்பிடிப்பது என உடன்பாடு எட்டப்பட்டது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment