பட்டாணி இருக்கா? அப்போ இந்த சாதத்தை செய்து பாருங்கள்..!
பட்டாணி இருந்தால் இந்த சுவையான பட்டாணி சாதத்தை செய்து பாருங்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிட பட்டாணி சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சைப் பட்டாணி – 1/4 கப், பாஸ்மதி அரிசி – 1 கப், சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 3, சோம்பு – 1 ஸ்பூன், லவங்கம் – 4, பட்டை சிறிய துண்டு – 2, பிரிஞ்சி இலை – 2, இஞ்சி சிறிய துண்டு – 2, ஜாதிபத்திரி – 1, அன்னாசிப்பூ – 2, எண்ணெய் – 4 ஸ்பூன், தேங்காய் – கால் மூடி, உப்பு – தேவையான அளவு, புதினா, கொத்தமல்லி தழை – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். பின்னர் அரிசியை ஊற வைக்க வேண்டும். தேங்காயை அரைத்து, தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு ஸ்பூன் சோம்பு, இஞ்சி, 6 பல் பூண்டு, 4 லவங்கம், தோல் உரித்த 10 சின்ன வெங்காயம், 3 பச்சை மிளகாய், அரை கைப்பிடி கொத்தமல்லி மற்றும் புதினா தழை இவற்றை ஒன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, நான்கு ஸ்பூன் எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பிரியாணி இலை, ஜாதிபத்திரி மற்றும் அன்னாசிப் பூவை சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். இதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இதனையடுத்து முக்கால் கப் பச்சைப் பட்டாணியை இதில் சேர்க்கவும். ஊற வைத்துள்ள அரிசியை மட்டும் இந்த கலவையுடன் சேர்த்து கலந்துவிட வேண்டும். பின்னர் இதில் ஒரு கப் தேங்காய் பால், முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் குக்கரை மூடி விசில் போட்டு மிதமான தீயில் வைத்து விடவேண்டும். இரண்டு விசில் வந்த பிறகு அடுப்பை அனைத்துவிட வேண்டும். சுவையான பச்சை பட்டாணி சாதம் ரெடி.