குடியரசு தலைவரை சந்திக்க காங்கிரஸ் கட்சி முடிவு!

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்திக்க காங்கிரஸ் கட்சி முடிவு.

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றியது தொடர்பாக குடியரசு தலைவரை சந்திக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது. ராகுல் காந்தி தலைமையில் 7 பேர் கொண்ட காங்கிரஸ் கட்சி குழு ஜனாபதியை சந்திக்க தேதி கேட்டுள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து லக்கிம்பூர் கேரியில் நந்த விவசாயிகள் மீதான வன்முறை தாக்குதல் தொடர்பாக புகார் தெரிவிக்க காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த வன்முறையில் 9 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஆஷிஷ் மிஸ்ரா மகன் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னரே முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆஷிஷ் மிஸ்ரா நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.

இதனைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா நேற்று இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டார். அவரை திங்கள்கிழமை வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்