அட்லாண்டிக்: பாரம்பரிய திருவிழாவில் கொல்லப்பட்ட 1,500 டால்பின்கள்..!

அட்லாண்டிக் கடல்ப்பகுதியில் பாரம்பரிய திருவிழாவிற்காக 1,500 டால்பின்கள் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டென்மார்க்கில் உள்ள வடக்கு அட்லாண்டிக் தீவுகள் சுமார் 50,000 மக்கள் தொகை கொண்டது. அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைத்துள்ள பரோயே தீவுக்கூட்டத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 1,400 க்கும் மேற்பட்ட வெள்ளை டால்பின்களை கொன்றுள்ள நிகழ்வு சமூக ஆர்வலர்களிடையே பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.

அங்கு நடைபெறும் பாரம்பரிய திருவிழாவில் டால்பின்களை கொன்றுள்ளனர். மேலும், டால்பின்கள் இறந்த அந்த கடல் பகுதி சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. கடல் சூழலுக்கு நன்மை தரக்கூடிய டால்பின்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் குறித்து சூழலியல் ஆர்வலர்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.