#BREAKING: லஞ்சம் வாங்கும்போது அதிகாரிகள் கூச்சப்படுவதில்லை – நீதிபதி கருத்து..!

#BREAKING: லஞ்சம் வாங்கும்போது அதிகாரிகள் கூச்சப்படுவதில்லை – நீதிபதி கருத்து..!

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதில்லை என நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியாற்றி வந்த கலைச்செல்வி தனியார் ஆலையின் வாகனத்தின் வாகன பதிவிற்கு லஞ்சம் கேட்டபோது  அவர்கள் அளித்த புகாரின் பெயரில் தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கலைச்செல்வி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட கலைச்செல்வி ஜாமீன் கோரிய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதில்லை என கருத்து தெரிவித்தார்.

மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசாசாரின் விசாரணை பெயரளவிலேயே உள்ளது. முறையான விசாரணை இல்லை. ஒருவரை கைது செய்தால் அவரது வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையிட வேண்டும் என தெரிவித்தார்.

author avatar
murugan
Join our channel google news Youtube